News Just In

9/18/2019 08:49:00 PM

உடல் பருமன் அறிந்ததும் அறியாததும்…


இளைஞர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் வேலை செய்கிறார்கள். ஆனால் உடலை வருத்தாமல் குளிரூட்டப்பட்ட அறையில் உடல் சுகமாக மன உளைச்சலோடு பணிபுரிகிறார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதிகப்படியான மன உளைச்சலும் கூட உடல்பருமனுக்கு காரணமாக அமைகிறது என்பதையும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.​

காலம் மாறிவிட்டது. எல்லாமே ரோபோக்களின் சாம்ராஜ்யம்தான். நினைத்த வேலைகளை நினைத்த நேரத்தில் செய்து முடிக்க எல்லா துறைகளிலும் விஞ்ஞானம் நுழைந்துவிட்டது. ஆனால் ஆரோக்யம் என்னும் துறையில் ஆரோக்யமான சூழல் இன்னும் எட்டவில்லை என்றே சொல்ல வேண்டும்.

உடல் ஆரோக்யமாக இருக்க சத்தான உணவுகளும், உடற்பயிற்சியோடு இணைந்த பணிகளுமே வாழ்க்கையாக கொண்டிருந்த முன்னோர்களின் வாழ்க்கை முறையை மாற்றி அதிலும் நவீனம் நுழைந்த அன்றே நமது ஆரோக்யமும் கேள்விக்குறியாக மாறிவிட்டது. நோய்களின்றி ஆரோக்யமாக வாழ்ந்த மூதாதையர்களின் வழியில் வந்த தற்போதைய சந்ததியினர் பெரும்பாலும் நோய்களின் கூடாரமாக மாறிவரும் உடலின் ஆரோக்யத்தைக் காக்க அரும்பாடு பட்டு கொண்டிருக்கிறார்கள்.

நோய்கள் ஒருபுறம் இருக்கட்டும்ஆரோக்யமான வாழ்க்கைக்கு ஆதாரமே உடல் வலு என்பதை பெறவே இங்கு அரும்பாடு பட வேண்டியிருக்கிறது. உலகம் முழுவதிலுமே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இயல்பாக சந்திக்கும் பிரச்னைகளில் தலையாய பிரச்னை உடல்பருமன் என்றே சொல்லலாம். உடல் பருமனுக்கு அதிக காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணங்கள் உணவு பழக்க வழக்கம், போதிய உடல் உழைப்பு இல்லாமை தான் என்கிறார்கள் மருத்துவர்களும்,உளவியல் நிபுணர்களும்.

அதிகாலையில் வயலுக்கு சென்று வியர்வை வழிய வேலை செய்த ஆண்களும், விஞ்ஞான உபகரணங்கள் இல்லாமல் குனிந்து நிமிர்ந்து வேலை செய்த பெண்க ளும், வீதி முழுக்க கூட்டம்போட்டு கும்மியடித்து விளையாடிய குழந்தைகளும் கடந்த30 வருடங்களில் தொலைந்துவிட்டார்கள் என்றே சொல்லலாம். கிராமங்களில் ஓரளவேனும் இதை எதிர்பார்க்கலாம் என்றாலும் நகரங்களில்இதற்கு வாய்ப்பு ஒரு சதவீதமும் இல்லை.

இன்றும் இளைஞர்களும், நடுத்தர வர்க்கத்தினரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களும் வேலை செய்கிறார்கள். ஆனால் உடலை வருத்தாமல் குளிரூட்டப்பட்ட அறையில் உடல் சுகமாக மன உளைச்சலோடு பணிபுரிகிறார்கள் என்பதை யாரும் மறுக்கமுடியாது. அதிகப்படியான மன உளைச்சலும் கூட உடல்பருமனுக்கு காரணமாக அமைகிறது என்பதையும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

உலக சுகாதாரஅமைப்பு உலகில் உடல்பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்படைந்து வருவதாக தெரிவித்துள்ளது. உலக அளவில் உடல்பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அதிகப்படியான எண் ணிக்கையில் இந்தியா இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிக உடல்பருமன் பிரச்னைக்கு உள்ளாகிறார்கள் என்கிறது மற்றோரு ஆய்வு ஒன்று.

அதே நேரம் ஆண்களும், குழந்தைகளும் கூடஉடல்பருமன் பிரச்னையைக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் அதிகமாக சென்றாலும் உடல் பருமன் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்பது தான் உண்மை.

மனிதனின் உயரத்துக்கு ஏற்றவாறு உடல் எடை இருக்க வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. ஒருவர் 182 செமீ உயரம் இருப்பதாகவைத்து கொண்டால் அதிலிருந்து 100 ஐ கழித்து எஞ்சியிருக்கும் எண்ணிக்கையில் 82 கிலோவரை இருப்பது சரியான உடல் எடை (அதாவது 182-100=82) இதில்3 கிலோ வரை கூடுதலாகவோ குறைவாகவோ இருந்தால் பிரச்னையில்லை. 7 கிலோவுக்கும் அதிகமான உடல் எடையைக் கொண்டிருப்பது சற்று பருமன் என்று சொல்லலாம்.15 முதல் 20 கிலோ வரையில் கூடுதலாக இருந்தால் கொஞ்சம் கூடுதலான பருமன் என்றும், அதற்கும் அதிகமானஎடையைக் கொண்டிருந்தால் அதை ஒபிசிட்டி என்னும் உடல்பருமன் என்றே சொல்ல வேண்டும்.

உடல்பருமனால் ஆரோக்யமான முன்னேற்றம்இல்லை. மாறாகபல்வேறு நோய்கள் உருவாக காரணமாக அமைந்துவிடுகிறது. உண்ணும் உணவில் உள்ள கலோரிகள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உடலிலேயே தங்கிவிடுவதால் உடல் எடை அதிகரித்து பல்வேறு பிரச்னைகளையும் உருவாக்கி விடுகிறது.

நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இதய நோய், உடல் உள் உறுப்புகள் கல்லீரல், பித்த நீர் குறைபாடு, பெண்களாக இருந்தால் மாதவிலக்கு பிரச்னை, குழந்தைப் பேறு உருவாவதில் பிரச்னை, ஹார்மோன் பாதிப்புகள் உடல் வலி, உடல்சோர்வு, நடப்பதில் சிரமம்,உடலில் சுறுசுறுப்பு குறைவது, எப்போதும் மந்தமாக காணப்படுவது, மன ரீதியிலான பாதிப்புகள்… என ஒவ்வொன்றாக பெற்று ஒட்டு மொத்த ஆரோக்கியத்தையும் இழக்க காரணமாகிறது ஒபிசிட்டி.

உடல்பருமன் என்னும் ஒபிசிட்டி என்பது நோயல்ல. ஆனால் நோய்களை உருவாக்க முக்கிய காரணமாக அமைகிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதே நேரம் உடல்பருமனைக் குறைக்கும் வேகமான எண்ணத்தோடு உரிய மருத்துவரை அணுகாமல் குறைந்த மணிநேரத்தில், குறைந்த நாட்களில் உடல்பருமனைக் குறைக்கிறோம் என்னும் வசீகரமான விளம்பரங்களில் சிலர் மயங்கி விடுகிறார்கள். இதனால் மேலும் உடல்பருமனை அதிகரித்துகொள்வதோடு உடலுக்கு தேவையான சத்துக்களின்றி ஆரோக்யத்தையும் தொலைத்து விடுகிறார்கள்.

நோய் என்னவென்பதைக் கண்டறிந்தால் தான் சிகிச்சை அளிக்கமுடியும் என்பது போல உடல்பருமனுக்கு உரிய காரணத்தைத் தெரிந்து கொண்டால்தான் சிகிச்சையும் பலன் அளிக்கும்.அளவுக்கு அதிகமான கொழுப்பு நிறைந்த உணவை எடுத்துக்கொண்டால் தான் உடல் பருமன்ஏற்படும் என்பதல்ல. முன்பே சொன்னது போலபோதிய உடல் உழைப்பின்மை, மாறிவரும் உணவு பழக்கம், மன அழுத்தம் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

உடல் பருமனைக் கொண்டிருப்பவர்கள் சுயமாக உணவு கட்டுப்பாட்டை பின்பற் றுகிறேன் என்று தீவிர டயட்டை மேற்கொள்வதும், உடலுக்கு உழைப்பை கொடுக் கிறேன் என்றுகடுமையான பயிற்சி செய்வதும் உடல்பருமனைக் குறைக்க எந்த வகையிலும் உதவாது. காய்ச்சலுக்கு மாத்திரை எடுத்துக்கொள்வது போன்று உடல் பருமனைக் குறைக்க மாத்திரைகள் எதுவும் இல்லை.

ஆனால் மருத்துவரது ஆலோசனையின் பெயரில் சத்துக்கள் குறையாத குறைந்த கலோரி வகையிலான உணவு வகைகளுடன், மனரீதியாக மனநல ஆலோசனையும்,உடலில் அதிக கொழுப்புகள் சேர்ந்துள்ள இடங்களில் கொழுப்பைக் குறைக்க உடற்பயிற்சியாளரின் ஆலோசனையுடன் கூடிய பயிற்சியும்தேவை என்கிறார்கள் மருத்துவர்கள்.

உடல்பருமன் ஆபத்துகளை விளைவிக்கும் என்பதை தெளிவாக உணர்ந்திருப்பவர்கள் அதை உரிய முறையில் அணுகினால் உடல் பருமனுக்குவிடை கொடுக்கலாம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் .

No comments: