க.பொ.த உயர்தரப் பரீட்சை 2019 இல் தொழில்நுட்ப பாடங்களுக்கு தோற்றி செயல்முறைப் பரீட்சையை எதிர்நோக்கியுள்ள மாணவருக்கான இலவச செயன்முறைக் கருத்தரங்கை (CTCT) கனடியத் தமிழர் அறக்கட்டளை நிதியம் நடாத்தவுள்ளது.
இம்மாதம் 19,20,21 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட கல்வி வலயங்களில் மேற்படி செயலமர்வு நடைபெறவுள்ளது. இக்கருத்தரங்கின் மூலம் 800 ற்கும் மேற்பட்ட மாணவர்கள் நேரடியாக பயன்பெறவுள்ளார்கள்.
வடமாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மடு-மன்னார் ஆகிய கல்வி வலய மாணவர்களுக்கான கருத்தரங்கை CTCT இன் சார்பாக யாழ் புனித பற்றிக் கல்லூரியின் தொழில்நுட்ப பாட ஆசிரியர் J.J. மைக்கல் அவர்கள் ஒழுங்கமைத்து வருகிறார்.
கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, மட்டக்களப்பு, திருக்கோயில் ஆகிய கல்வி வலயங்களில் CTCT யின் சார்பாக அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண கல்லூரியின் தொழில்நுட்பப் பாட ஆசிரியர் M. விஜயராஜா ஒழுங்கமைத்து வருகிறார்.
மட்டக்களப்பில் மட்/இந்துக் கல்லூரியில் இக் கருத்தரங்கை நடாத்த மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் V.மயில்வாகனம் அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: