News Just In

4/04/2026 09:31:00 PM

கார்க் தீவை கைப்பற்ற முடியாமல் திணறிய அமெரிக்கா - ஈரான் போட்ட மாஸ்டர் பிளான்!

கார்க் தீவை கைப்பற்ற முடியாமல் திணறிய அமெரிக்கா - ஈரான் போட்ட மாஸ்டர் பிளான்!



ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் தொடங்கி ஆறு வாரங்கள் கடந்துள்ள நிலையில், ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் கார்க் தீவைக் கைப்பற்ற அமெரிக்கா எடுத்த முயற்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள கார்க் தீவு, ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 90 சதவீதத்திற்கும் மேல் கையாளும் ஒரு மிக முக்கியமான முனையமாகும்.

இந்தத் தீவைத் தகர்ப்பதன் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முற்றிலுமாக முடக்க அமெரிக்கா திட்டமிட்டது.

இந்நிலையில், ஈரான் தனது உள்நாட்டுத் தயாரிப்பான 'மஜித்' (Majid) மற்றும் அதிநவீன ஏவுகணை அமைப்புகளை கார்க் தீவைச் சுற்றி நிலைநிறுத்தியுள்ளது.

ரேடார்களில் சிக்காமல், வெப்பத்தை வைத்துத் தாக்கும் (Infrared) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால், அமெரிக்காவின் அதிநவீன போர் விமானங்களே இங்கு நுழையத் தயங்குகின்றன.

No comments: