News Just In

4/06/2026 06:52:00 PM

கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!

கிழக்கு மாகாண வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்!


கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் கீழ் காலியாக உள்ள வலயக் கல்விப் பணிப்பாளர் பதவிகளுக்காக, தகுதியுள்ள அதிகாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுவதாக மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் கு.குணநாதன் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள வலயங்களில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (SLES) தரம் I ஐச் சேர்ந்த அதிகாரிகளாக இருத்தல் வேண்டும்.

அம்பாறை, தெஹியத்தகண்டிய,அக்கரைப்பற்று, மஹஓயா ஆகிய கல்வி வலயங்களுக்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க விரும்பும் தகுதியுள்ள அதிகாரிகள், இதற்கான மாதிரி விண்ணப்பப் படிவம் மற்றும் மேலதிக விபரங்களை கிழக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையதளமான www.ep.gov.lk இற்குப் பிரவேசித்து, அதில் உள்ள 'கல்வி அமைச்சு' (Ministry of Education) பக்கத்தின் ஊடாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய இறுதித் திகதி எதிர்வரும் ஏப்ரல் 30 ஆகும்

No comments: