News Just In

4/01/2026 06:37:00 PM

பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவன் அ. பிரஜித் – பொதுமக்கள் பாராட்டு

பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவன் அ. பிரஜித் – பொதுமக்கள் பாராட்டு


நூருல் ஹுதா உமர்

கா.பொ.த. உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களிலும் சிறப்பு சித்தி பெற்று மாவட்ட ரீதியில் 27ஆம் இடத்தைப் பெற்று வைத்தியத் துறைக்கு தெரிவான மாணவன் அன்பழகன் பிரஜித் அவர்களுக்கு நாவிதன்வெளி பிரதேச பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இவர் அடைந்துள்ள இச்சிறப்பான சாதனை அவரது உறுதியான இலக்கு, அயராத உழைப்பு மற்றும் தளராத தன்னம்பிக்கையின் விளைவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த வெற்றி அவரது குடும்பத்தினர், கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் கல்வி கற்ற பாடசாலை மட்டுமின்றி, ஒட்டுமொத்த நாவிதன்வெளி பிரதேச மக்களுக்கும் பெருமையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தகைய சாதனைகள், எதிர்கால இளம் தலைமுறைக்கு சிறந்த முன்னுதாரணமாகவும், கல்வி நோக்கில் ஊக்கமளிக்கும் சக்தியாகவும் அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

மாணவன் அன்பழகன் பிரஜித் அவர்கள் தனது எதிர்கால உயர்கல்வி மற்றும் சமூகப் பணிகளில் மேலும் பல சாதனைகள் படைத்து உயரங்களைத் தொட வேண்டும் எனவும், அவரது கல்விப் பயணம் தொடர்ந்தும் சிறக்க இறையருள் கிடைக்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நாவிதன்வெளி தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்

No comments: