இன்று கௌரவிப்பு:
மட்டக்களப்பு (EDS)கல்வி அபிருத்திச் சங்கத்தின் பழைய மாணவர் அமைப்பினால் க.பொ.த உ/த பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற பழையமாணவர்கள் இன்று கௌரவிக்கப்பட்டனர்.
பழைய மாணவர் மன்றத்தின் தலைவர் மோகனசுந்தரம் கஜருபன்
தலைமையில் கல்வி அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
தலைமையில் கல்வி அபிவிருத்திச்சங்க மண்டபத்தில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு மண்முனை மேற்குபிரதேச சபைத் தவிசாளர் த.கோபாலபிள்ளை அதிதியாககலந்து சிறப்பித்தார்.இவருடன்
கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன்,தலைவர் நா.ஜோதிராசா,செயலாளர் வ.கமலதாஸ்,பொருளாளர் ம.லட்சுதன் கல்வி அபிவிருத்திச்சங்கத்தின்சிரேஷ்டஆசிரியர்கள்K.குணரெத்தினம்,
கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி.தேவசிங்கன்,தலைவர் நா.ஜோதிராசா,செயலாளர் வ.கமலதாஸ்,பொருளாளர் ம.லட்சுதன் கல்வி அபிவிருத்திச்சங்கத்தின்சிரேஷ்டஆசிரியர்கள்K.குணரெத்தினம்,
சா.புனிதசுந்தரம்ஆகியோருடன் கல்வி அபிவிருத்திச்சங்கத்தின் அம்பாரை மாவட்டஇணைப்பாளர் வே.விஜயரெத்தினமும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில்
பிரபாகரன் அபிலாஜினி…..... வாகரை
சுதேந்திர ராசா டனுஷ்கா… வெருகல்
நவரத்தினம் ரக்சியானந் … .வீரமுனை
தவரூபன் டர்சிகா ……. ...... வெருகல்
லிங்கேஷ்வரன் பதுசாளினி …முத்துச்சேனை
ஆகியோருக்கு ஞாபகாரத்த சின்னங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பௌதிக விஞ்ஞானத்துறையில் 3Aபெறுபேற்றை பெற்ற வீரமுனையைச்
சேர்ந்த நவரத்தினம் ரக்சியானந்திற்கு ஞாபகார்த்த சின்னத்துடன் பொன்னாடை போர்த்தி அதிதியால் கௌரவிக்கப்பட்டார்.
No comments: