(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாது கிடப்பில் கிடந்து வரும் பல பொதுப் பிரச்சினைகளை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவின் கவனத்திற்கு எடுத்துச் சென்று சமர்ப்பித்துள்ளார் ஏறாவூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர்.
பல்கலைக்கழக மாணவரான ஏ.எச். அப்துல்ஹாதி எனும் இவ்விளைஞன் தேசிய மக்கள் சக்தி அரசின் பிரஜா சக்தியின் உறுப்பினராகவும் பிரதேச இளைஞர் அணியின் தீவிர செயற்பாட்டாளராகவும் இயங்கி வரும் நிலையில் தன்னார்வத்துடன் கிழக்கு மாகாண ஆளுநரை, திருகோணமலையிலுள்ள ஆளுநர் செயலகத்துக்கு நேரடியாகச் சென்று சமூகப் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.
இதுபற்றி தான் கவனத்தில் எடுப்பதாக ஆளுநர் பேராசிரியர் ரத்னசேகர இளைஞர் அப்துல்ஹாதியிடம் உறுதியளித்துள்ளார்.
அதனடிப்படையில், ஏறாவூரில் கடந்த 102 வருடங்களாக பொலிஸார் வசமுள்ள ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியின் காணிப்பிரச்சினை, ஏறாவூரில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தூர்;ந்து போய்க்கிடக்கும் ஏறாவூர் பொதுச் சந்தை விவகாரம், தற்சமயம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்திய அத்தியட்சகர் இல்லாமை போன்ற விடயங்களை இளைஞர் அப்துல்ஹாதி ஆளுநரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.
இப்பிரச்சினைகள் கடந்த காலங்களில் பிரதேச அரசியல்வாதிகளாலும் பொது அமைப்புக்களாலும் ஜனாதிபதி மட்டத்திற்குக் கூட முன்கொண்டு செல்லப்பட்டிருந்தாலும் இன்றுவரை தீர்வு எதுவும் கிட்டாத நிலையில் அவை கிடப்பிலேயே உள்ளன.
ஆயினும், ஆட்சியிலிருந்த அரசாங்கங்கள் இப்பிரச்சினைகளைச் சீர்தூக்கிப் பார்த்து தீர்வு காணாமல் கிடப்பில் போட்டு வந்துள்ளபடியால் பிரதேச மக்களின் கல்வி, பொருளாதாரம், சுகாதாரம், சமூக ஒற்றுமை என்பன சீர்குலைந்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

No comments: