News Just In

1/20/2026 11:44:00 AM

நிலவும் குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கும் அபாயம்!


நிலவும் குளிர் காலநிலையுடன் வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கும் அபாயம்!



நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம் என கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் குறிப்பிடுகையில்,

இந்நாட்களில் நிலவும் குளிர் மற்றும் வறண்ட வானிலையுடன் சில வைரஸ் நோய்களின் பரவல் அதிகரிக்கலாம். எமது சுவாசத் தொகுதியின் மேற்பகுதியையே இந்த வைரஸ்கள் பெரும்பாலும் பாதிக்கின்றன.

பொதுவாக இந்த வைரஸ் நோய்கள் முன்பள்ளி வயதுடைய சிறுவர்கள் மத்தியில் அதிகமாகப் பரவக்கூடும். காய்ச்சல், இருமல், தடிமன், தொண்டை வலி, கடும் தலைவலி, தசை வலி மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் இதில் ஏற்படக்கூடும்.

உங்களுக்கு மூன்று நாட்களுக்கு மேல் இந்த நோய் அறிகுறிகள் காணப்பட்டால், அதேபோல் உங்களுக்குச் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் நீங்கள் மிக விரைவில் வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்- என அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: