கண்டியனாறு நல்லதண்ணியோடைக்குளப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் .G ஸ்ரீ நேசன்விஜயம்
மட்டக்களப்பு மாவட்ட மண்முனை மேற்குப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள, நல்லதண்ணியோடைக்குளத்தின் அணைக்கட்டினை மேலும் உயர்த்துவதன் மூலமாக வெள்ள நீரைச் சேகரித்து, நெல் மற்றும் உப உணவுப் பயிர்ச் செய்கையினை அதிகரிக்கமுடியும். அத்துடன், போக்குவரத்துக்காகச் சிறுபாலம் ஒன்றும் அமைக்க வேண்டிய தேவை உள்ளதாக விவசாயிகள் கூறினர்.
இதுதொடர்பாக கமலத்திணைக்கள உப ஆணையாளரின் கவனத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீ நேசன் அறிவித்தார் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையாளர் குறிப்பிட்டார்
No comments: