News Just In

11/10/2025 06:17:00 AM

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கண்டியனாறு பிரதேச முழு நாள் கள விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்

மட்டக்களப்பு மண்முனை மேற்கு கண்டியனாறு பிரதேச   முழு நாள் கள விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன்


மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேச கண்டியனாறு பிரதேசத்திற்கான முழுநாள் கள விஜயமொன்றை பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் அவர்கள்  மேற்கொண்டிருந்தார். 

அதன்படி குறித்த பிரதேசத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய பின்வரும் விடயங்கள் குறித்து ஆராய்ந்ததுடன் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கும் கொண்டு வந்ததுடன் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

01. கண்டியனாறு குளம், அடைச்சகல் குளம், நல்லதண்ணியோடை ஆகிய குளங்களின் புனரமைப்புச் செய்யப்பட வேண்டிய விடயங்கள்.

02. அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய வீதிகள்.

03. இதுவரை மின்சாரம் வழங்கப்படாதுள்ள இடங்கள்.

04. யானைப் பிரச்சினை உள்ள இடங்கள்.

05. மருத்துவ சேவையினை மேம்படுத்தல்

No comments: