யாழில் உயிரிழந்த மூன்று குழந்தைகளின் தாய்; காரணம் வெளியானது

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் ஒரே தடவையில் 03 குழந்தைகளை பிரசவித்த தாய் உயிரிழந்தமைக்கு, கிருமி தொற்று காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தாயின் உடலம் மீதான பிரேத பரிசோதனையின் போது இந்த விடயம் உறுதி செய்யப்பட்டதாக யாழ்ப்பாண போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பில் பணிப்பாளர் மேலும் கூறியுள்ளதாவது,

யாழ்ப்பாணம் கரவெட்டியை சேர்ந்த 45 வயதான குறித்த பெண் 21 வருடங்களின் பின்னர் குழந்தைகளை பிரசவித்துள்ளார். அதன்படி, குறித்த தாய் ஒரே கருவில் 03 சிசுக்களை கடந்த ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி பிரசவித்துள்ளார்.
02 ஆண் சிசுக்களும், ஒரு பெண் சிசுவும் பிறந்துள்ளன. எனினும், குழந்தை பிரசவித்த நாள் முதல் குறித்த தாய் சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.
அதிக குருதிபோக்கு மற்றும் கிருமி தொற்று காரணமாக தாய் நோய்வாய்க்குட்பட்டிருந்ததாக திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் குறிப்பிட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் உயிரிழந்த தாயின் உடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுள்ளது.
No comments: