News Just In

11/08/2025 10:40:00 AM

பல்கலை மகளிர் விடுதியின் அருகே மனித கரு உடற்கூறு; அதிர்ச்சியில் அதிகாரிகள்!

பல்கலை மகளிர் விடுதியின் அருகே மனித கரு உடற்கூறு; அதிர்ச்சியில் அதிகாரிகள்!



பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஜயவர்தன மகளிர் விடுதியின் அருகே மனித கருவின் உடற்கூறு பகுதிகள் புதைக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

விஜயவர்தன மண்டபத்தின் துணைவேந்தர் மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் நேற்று (07) நண்பகல் பேராதனை பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ பீடம், அறிவியல் பீடம் மற்றும் கால்நடை மருத்துவ பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்கள் உட்பட சுமார் 2,000 மாணவர்கள் அந்த விடுதியில் உள்ளனர். கருவின் உடற்கூறு போன்ற பாகங்களைக் கண்டறிந்த பின்னர், பல்கலைக்கழக துணைவேந்தர் அவற்றை புதைக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

அதன் பின்னர் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்படுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பேராதனை காவல் நிலைய குற்றப்பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: