News Just In

11/09/2025 08:32:00 PM

நுகேகொடைப் பேரணி! தமிழரசுக்கட்சியின் அறிவிப்பு

நுகேகொடைப் பேரணி! தமிழரசுக்கட்சியின் அறிவிப்பு


நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டு எதிரணியின் அரச எதிர்ப்புப் பேரணியில் இலங்கைத் தமிழரசுக் கட்சி பங்கேற்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரணியில் பங்கேற்குமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தனிப்பட்ட ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தாங்கள் அந்தப் பேரணியில் பங்கேற்கமாட்டோம் என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், தமது கட்சியும் அந்தப் பேரணியில் பங்கேற்காது என்றும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேலும் கூறியுள்ளனர்.

No comments: