
இந்தியாவின் டெல்லியில் நடந்த வெடிப்புச் சம்பவத்தில் வெடிப்புக்குள்ளான காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த காரினை பதிவு செய்வதற்கு போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
நேற்றைய தினம், டெல்லி - செங்கோட்டை மெட்ரோ தொடருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அருகே காரில் மாலை 6.50 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இதில் 24 பேர் படுகாயமடைந்துள்ளதுடன், 09 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த வெடிப்புச் சம்பவமானது ஒரு திட்டமிட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல் என இந்திய அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, இந்தியாவின் முக்கிய பகுதிகளில் அதி உயர் பாதுகாப்பு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதுடன் விசாரணைகளும் தீவிரப்படுத்தப்பட்டன.
இதற்கிடையில், வெடிப்புக்குள்ளான காரில் முன்னாள் உரிமையாளர் மற்றும் தற்போதைய உரிமையாரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
No comments: