கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் 2026 இரண்டாம் தவணைக்கான சிறுவர் பாதுகாப்புக் குழு மீளாய்வுக் குழு கூட்டம் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.
குழுவின் பொறுப்பாசிரியர் எம்.எப்.எம்.றிபாஸின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த மீளாய்வுக் குழு கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் வீ. குகராஜ் விசேட பிரதிநிதியாக கலந்து கொண்டு கடந்த கால மற்றும் எதிர்கால திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டதுடன் சிறுவர் பாதுகாப்பு தொடர்பிலும் விளக்கமளித்தார்.
மேலும், பெற்றோர் பிரதிநிதியாக கலந்து கொண்ட பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் செயலாளர் நூருல் ஹுதா உமர் சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்துரை வழங்கினார். இக்கூட்டத்தில் குழுவில் அங்கத்துவம் வகிக்கும் ஆசிரியர், மாணவர் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்
No comments: