நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் டெங்கு தடுப்புக் குழு கூட்டம் இன்று (03) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி அவர்கள், டெங்கு நோயின் தற்போதைய நிலை, தடுப்பு நடவடிக்கைகள், மற்றும் பாடசாலை – சமூக மட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கமளித்தார்.
மேலும், பாடசாலை வளாகங்களில் நீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்க வேண்டிய அவசியம், மாணவர்களிடையே சுகாதார பழக்க வழக்கங்களை ஊக்குவிக்கும் முக்கியத்துவம் ஆகியவற்றையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரிவுக்குட்பட்ட அனைத்து நிறுவனத் தலைவர்களும் அதன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பு வழங்கினர்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் டெங்கு தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அனைத்து துறைகளுடனும் இணைந்து மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள், சமூக விழிப்புணர்வை மேம்படுத்துவதோடு, சுத்தமான சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கும் பெரும் பங்களிப்பாக இருக்கும் என சுகாதார வைத்திய அதிகாரி இதன்போது தெரிவித்தார்.
No comments: