News Just In

11/11/2025 05:33:00 PM

டெல்லி குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா? காரை ஓட்டிய மருத்துவர் இவர்தான்

டெல்லி குண்டு வெடிப்பு தற்கொலைப்படை தாக்குதலா? காரை ஓட்டிய மருத்துவர் இவர்தான்


டெல்லி குண்டு வெடிப்பில் காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
டெல்லி கார் குண்டு வெடிப்பு

டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ அருகே நேற்று மாலை 6:52 மணியளவில், கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.



இது தொடர்பாக, டெல்லி காவல்துறையினர் உபா(UAPA) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இந்நிலையில், காரை ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை NIA வெளியிட்டுள்ளது

இதில் காரை ஓட்டியவர் பரிதாபத்தில் கைது செய்யப்பட்ட குழுவை சேர்ந்த மருத்துவர் உமர் முகமது என கூறப்படுகிறது.

கடந்த 2 நாட்களாக டெல்லி அருகே உள்ள பரிதாபாத்தில் வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கிகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், மருத்துவர்கள் உள்ளடங்கிய பயங்கரவாத கும்பலை கைது செய்தனர்.

இந்த மருத்துவர் உமர் முகமதுவும், அந்த கும்பலை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
தற்கொலைப்படை தாக்குதல்?

தனது கூட்டாளிகள் காவல்துறையினரிடம் சிக்கி, சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதால், உமர் தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியது டில்லி காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

காரில் அமோனியம் நைட்ரேட் மற்றும் RDX வெடிமருந்துகள் இருந்திருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



அந்தக் கார் மாலை 3.19 மணிக்கு பார்க்கிங் பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் மாலை 6.30 மணிக்கு அங்கிருந்து எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.


அவர் காரை பார்க்கிங் செய்திருந்த போது கூட காரை விட்டு இறங்கவில்லை. அவர் யாரோ ஒருவரின் உத்தரவுக்காக காத்திருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இத்தாக்குதலுக்கும் கடந்த சில நாட்களில் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக NIA தெரிவித்துள்ளது.
யார் இந்த உமர் முகமது?

பிப்ரவரி 24, 1989 அன்று புல்வாமாவில் பிறந்த உமர் முகமது, 2017 ஆம் ஆண்டில் ஸ்ரீநகர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் முடித்து, ஃபலா மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணியாற்றியுள்ளார்.

உமர் மருத்துவராக இருந்தாலும், ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட i20 காரின் முதல் உரிமையாளர் முகமது சல்மான் ஆகும். இவருக்கு பின்னர் கார் 3 பேருக்கு கை மாறி இறுதியாக புல்வாமாவை சேர்ந்த தாரிக் என்ற நபர் வாங்கியுள்ளார். தாரிக் தான் மருத்துவர் உமருக்கு காரை வழங்கியுள்ளார்.

கார் வெடிப்பில் ஓட்டியவரின் உடல் சிதிலடமடைந்துள்ள நிலையில், DNA பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது. புலனாய்வு அமைப்புகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: