உயரிய இராணுவ விருதை பெற்ற கனேடிய தமிழர் வாகீசன் மதியாபரணம்
இலங்கையில் பிறந்த தமிழரான வாகீசன் மதியாபரணம், கனடாவின் மிக உயரிய இராணுவ விருதுகளில் ஒன்றான Order of Military Merit (M.M.M.) விருதைப் பெற்ற முதல் தமிழராக வரலாறு படைத்துள்ளார்.
கனடாவின் ஆளுநர் ஜெனரல் வசிக்கும் Rideau Hall மாளிகையில் நடைபெற்ற விழாவில், வாகீசன் மதியாபரணத்திற்கு இந்த பெருமை வழங்கப்பட்டது. அகதியாக கனடாவுக்கு வந்த அவர், சுமார் முப்பது ஆண்டுகள் கனடா இராணுவத்தில் பணியாற்றி, அண்மையில் ஓய்வுபெற்றார்.
“இந்த விருது ஒரு பதக்கம் மட்டுமல்ல, என் கனவின் நிறைவேற்றம்,” என அவர் கூறினார். “அகதியாக வந்த ஒரு தமிழ் இளைஞன், கனடா என்ற தேசத்துக்கு பணியாற்றி, இன்று அதன் உயரிய மரியாதையைப் பெறுவது பெருமையாக உள்ளது.”
அவரது சாதனை, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், அகதியாக புதிய வாழ்க்கையைத் தொடங்கிய அனைவருக்கும், ஊக்கம் அளிக்கும் பெருமைமிகு வரலாறு ஆகும்
11/10/2025 06:02:00 AM
உயரிய இராணுவ விருதை பெற்ற கனேடிய தமிழர் வாகீசன் மதியாபரணம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: