மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் சிறப்பு விழிப்புணர்வு நடைபவனி ஒன்று இடம்பெற்றது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையிலும் வழிகாட்டலிலும் நடைபெற்ற இந்நடைபவனியில், மார்பக புற்றுநோயைத் தடுக்கும் வழிமுறைகள், ஆரம்ப கட்ட அறிகுறிகளை அறிதல், மற்றும் முறையான பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்து விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பொதுச் சுகாதார தாதிய சகோதரி, மேற்பார்வை பொது சுகாதார மருத்துவ மாது, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், டெங்கு களத்தடுப்பு ஊழியர்கள் மற்றும் மற்றும் அலுவலக ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
இந்நடைபவனியில் வீட்டுத்தரிசிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரவச் செய்வதற்கான நடவடிக்கைகள் மற்றும் சமூக மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வு மூலம் பெண்களின் உடல்நலப் பராமரிப்பில் மார்பக புற்றுநோயின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அனைவரும் ஆரோக்கியமான வாழ்வை நோக்கி முன்னேறுவதற்கான உறுதியும் ஏற்படுத்தப்பட்டது.
No comments: