News Just In

3/30/2025 07:03:00 AM

தேசபந்து விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கு சிஜடி அழைப்பு!

தேசபந்து விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கு சிஜடி அழைப்பு




முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஒருவரை திங்கட்கிழமை குற்றப் புலனாய்வுத் துறையில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெலிகம துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான தகவல்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை முன்னெடுப்பதற்காக குறித்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும் இந்த சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சருக்குத் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், இவ்வாறு விசாரணை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments: