News Just In

10/18/2025 06:42:00 PM

இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!

இஷாரா செவ்வந்தியின் வங்கி கணக்குகள் தொடர்பில் திடுக்கிடும் தகவல்!



கனேமுல்லை சஞ்சீவ கொலையில் நேபாளத்தை கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் வெளிவந்துள்ள பல தகவல்களினடிப்படையில் பல்வேறு வகையான கோணத்தில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில், இஷாராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

எனினும், அவருக்கு வேறு ஏதேனும் வங்கிக் கணக்குகள் உள்ளதா? என்பதைக் கண்டறிவதற்கான விசாரணைகளும் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்திற்காக தான் எந்தவித பணமும் பெறவில்லை என்றும் இஷாரா செவ்வந்தி விசாரணையில் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நாட்டை உலுக்கிய கொலை சம்பவத்தில் இஷாரா , தான் பணம் பெறவில்லை என கூறியுள்ளமை பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments: