News Just In

10/08/2025 06:20:00 PM

மட்டக்களப்பில் பாதசாரியை மோதி தள்ளிய கடற்படை வாகனம்

மட்டக்களப்பில் பாதசாரியை மோதி தள்ளிய கடற்படை வாகனம்


மட்டக்களப்பில் (Batticaloa) கடற்படை கனகர வாகனத்தில் மோதி நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (07) வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பிரயாணித்த கடற்படை கனகர வாகனமானது, வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகில் வீதியால் சென்ற பாதசாரி ஒருவர் மீது மோதியுள்ளது

இதையடுத்து காயமடைந்த நபர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதன்பின்பு, வாகன சாரதியான கடற்படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், வாகனத்தையும் தடுத்து வைத்துள்ளதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட வாகன சாரதியை நீதிமன்றத்தில் முன்னிருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: