News Just In

10/08/2025 11:19:00 AM

வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்த 230 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் இளம் தம்பதியினர் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வைத்த 230 கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் 24,23 வயதுடைய இளம் தம்பதியினர் கைது 


உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் தலைமையிலான பொலிஸார் திங்கட்கிழமை (06) மாலை கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம். ஜறூஸ் கிடைத்த தகவல் ஒன்றிணை அடுத்து அவர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சம்பவ தினமான திங்கட்கிழமை (06) மாலை 4.30 மணியளவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்துக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கல்குடாவில் இருந்து ஐஸ் போதை பொருளை முச்சக்கரவண்டியில் எடுத்துக் கொண்டு சென்ற போது அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

இதையடுத்து அவர்களிடம் இருந்து 230 கிராம் ஐஸ் போதை பொருளை கைப்பற்றினர். அதனையடுத்து அவர்களையும் கைது செய்தது முச்சக்கரவண்டியும் கைப்பற்றினர்.மொறக்கொட்டான்சேனையில் இருக்கும் ஒரு பிரதான போதைப் பொருள் வியாபாரி கொழும்பில் நாய் குட்டி ஒன்று வாங்கி இருப்பதாகவும் அதனை எடுத்து கொண்டு வந்து தருமாறு குறித்த தம்பதிகளிடம் கூறியுள்ளார். அதற்கு கூலியாக 30 ஆயிரம் ரூபாய் பணம் தருவதாக தெரிவித்து முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொழும்புக்கு புகையிரதத்தில் சென்று அங்கு புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் வழங்கியதையடுத்து அவர்கள் பஸ் வண்டி ஒன்றில் கல்குடாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர்
இதையடுத்து சம்பவ தினமான திங்கட்கிழமை (06) மொறகொட்டாஞ்சேனையில் உள்ள போதை வியாபரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து வாங்கி கொண்டு வந்த நாய்க்குட்டி மற்றும் பையை கொண்டு சென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் பிரயாணித்து கொண்டிருந்த போது பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்கவில்லை எனவும் இதில் போதைப் பொருள் இருப்பது தங்களுக்கு தெரியாது என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

, கைது செய்யப்பட்ட இளம் தம்பதியை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்





No comments: