News Just In

10/10/2025 01:02:00 PM

மக்களை சுரண்டும் நுண் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..!இரா சாணக்கியன்

மக்களை சுரண்டும் நுண் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா..!






மக்களை சுரண்டும் மத்திய வங்கியின் அனுமதி அல்லாத நுண் கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமா. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நியாயம் கிடைக்குமா இரா  சாணக்கியன் வினா 

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் 10.10.2025 கேள்வி பதிலின் போது. சாணக்கியனது கேள்வியானது நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரிடம் வினாவப்பட்டது. அதில் சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில், ஏறாவூர் மற்றும் மருதமுனை ஆகிய பிரதேசங்களில் Privelth Global PVT LTD என்னும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்று 2014.02.05 காலப்பகுதியில் நடாத்தப்பட்டது. மேற்படி நிதி நிறுவனத்தின் பணிப்பாளர்களாக பணியாற்றிய அகமட் ஷெரின், முகமது ஷிஹாப் (ஷிஹாப் ஷெரீம்) மற்றும் பாத்திமா பர்ஸ மார்கார் ஆகியோரால் 1400 பேரிடம் சுமார் 170 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது என்பதையும்.

கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி இந்தியாவிலிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள இவர்கள் இன்றளவிலும் காணாமல் போய் உள்ளார் என்பதனை அமைச்சர் அறிவார்களா. இதில் குறிப்பிட்டவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாது என்பதையும் இவர்கள் மோசடி செய்துள்ள தொகையை மீள அதன் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும், அது தொடர்பில் பின்பற்றப்படும் நடவடிக்கை யாவை என்பதையும் மற்றும் இவ்வாறான நிதி நிறுவனங்கள் தொடர்பான முறையான கண்காணிப்பு மேற்கொண்டு நம்பகத்தன்மை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும் அமைச்சர் சபைக்கு அறிவிப்பாரா என்பதாக சாணக்கியன்  கேள்விகள் அமைந்திருந்தது.

நிதி மோசடிகள் தொடர்பில் தொடர்ச்சியாக சாணக்கியன் பல பிரச்சனைகளை கவனத்தில் கொண்டு வந்துள்ளார்  அதில் The Finance நிறுவன பிரச்சனை சம்பந்தமாகவும் பலமுறை கதைத்துள்ளேன் அதில் முதலிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் அவர்களுக்கான நீதியானது வழங்கப்படவில்லை.

ஒரு வரவேற்கத்தக்க விடயம் குறிப்பாக மண் முனை தென் எருவில் பற்று தவிசாளர் மே. வினோராஜ் அவர்கள் ஒரு முடிவு எடுத்துள்ளார். அப்பிரதேசத்தில் இயங்கி வரும் நுண்கடன் நிறுவனங்கள் மக்களிடம் 200 மற்றும் 300 வீதத்துக்கு அதிகமான வட்டியினை வசூலிப்பதாகவும் அவர்கள் மத்திய வங்கியின் அனுமதி இன்றி செயல்படுவதாகவும் தனியே வியாபார பதிவை கொண்டு மாத்திரம் செயற்பட்டு வருவதாகவும் அதனால் தரப்படட மக்கள் பாதிக்கப்பட்டு வருவதனால் அவர் இதற்கு எதிராக ஒரு நடவடிக்கை ஒன்றினை எடுத்துள்ளார். இவரது இவ் நடவடிக்கையினை மென்மேலும் துரிதப்படுத்துவதற்கு இவ்வாறான நிதி நிறுவனங்கள் மத்திய வங்கியின் அனுமதியின்றி செயல்பட முடியுமா என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் என்பதையும் இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நிறுத்துவதற்குரிய ஏதேனும் ஏற்பாடுகள் செய்யுமா என்பது பற்றியும் மற்றும் ஏற்கனவே இவ்வாறான நுண் கடன் நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான தீர்வு குறுகியகாலத்துக்குள் கிடைக்குமா என்பதையும் கேட்டுள்ளார்.

No comments: