நூருல் ஹுதா உமர்
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தாய் மற்றும் சேய்நல மேம்பாட்டை கருத்தில் கொண்டு, பொது சுகாதார மருத்துவ மாதுக்களிடமிருந்து வினைத்திறன் மிக்க சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இத்திட்டம், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் திருமதி சகிலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் தலைமையில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, இன்று (10.10.2025) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடமையாற்றும் பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான வாராந்த பயிற்சி நெறி நடைபெற்றது. இப்பயிற்சியின் போது மார்பகப் புற்றுநோய் தொடர்பான வினாக்கொத்து (Quiz) நிகழ்வும் இடம்பெற்றது.
இப்பயிற்சியில் சிறந்த திறமையை வெளிப்படுத்தி அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற பொதுச் சுகாதார மருத்துவ மாது எம்.எஸ்.எஸ். பரீனா அவர்களுக்கு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சார்பில் பாராட்டுக்களை தெரிவிக்கப்பட்டன.
No comments: