News Just In

10/10/2025 09:25:00 AM

2025/2026 க்கான வடகீழ்ப் பருவக்காற்றின் முதற் சுற்று மழை!

2025/2026 க்கான வடகீழ்ப் பருவக்காற்றின் முதற் சுற்று மழை 
 எதிர்வரும் 23.10.2025 அன்று தாழமுக்கத்தோடு ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எதிர்வரும் 21.10.2025 அன்று தென்மேற்கு வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் ஒன்று உருவாகும். இத்தோடு வடகீழ்ப் பருவக்காற்று உடைவு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆயினும் எங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வடகீழ்ப் பருவக்காற்றின் முதலாவது சுற்று மழை 23.10.2025 அன்று தொடங்கும். ஆயினும் இடத்திற்கிடம் இது வேறுபடும்.

23.10.2025 ஆரம்பிக்கும் முதற் சுற்று மழை 30.10.2025 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

இவ்வாண்டு வடகீழ்ப் பருவக்காற்று காலத்தில் வங்காள விரிகுடாவில் தோன்றும் தாழமுக்கங்கள் பெரும்பாலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரங்களிலேயே கரையைக் கடக்கும் வாய்ப்புள்ளன. ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாகாண நிர்வாகங்கள், மாவட்ட நிர்வாகங்கள் போதுமான தயார்படுத்தல்கள், விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொள்வது சிறந்தது.

காலபோக நெற் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இந்த மழை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு தமது பயிர்ச்செய்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறந்தது.

- நாகமுத்து பிரதீபராஜா -

No comments: