News Just In

6/05/2025 03:52:00 PM

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா

இந்தியாவில் விழுந்த பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை பாகங்கள் - பீதியில் சீனா



இந்தியாவில் பாகிஸ்தானிய PL-15E ஏவுகணை கண்டுபிடிக்கப்பட்டதால் சீனாவிற்கு கவலை எழுந்துள்ளது.

கடந்த மாதம் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த வான்வழி மோதலுக்குப் பிறகு, பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டம் அருகே கமாகி தேவி கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட PL-15E ஏவுகணையின் பகுதி, சீனாவுக்கு மிகப்பாரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

இந்த PL-15E என்பது சீனாவின் அதிநவீன beyond-visual-range (BVR) ஏவுகணை ஆகும். இது பாகிஸ்தான் வான்படையால் இந்திய விமானங்களை நோக்கி ஏவப்பட்டு, தவறுதலாக இந்திய எல்லைக்குள் விழுந்தது.

அதிலும் முக்கியமாக, அதன் dual-pulse motor, datalink, inertial navigation system மற்றும் crown jewel என்னு அழைக்கபப்டும் AESA Radar Seeker ஆகிய முக்கிய பாகங்கள் முழுமையாக இருந்தன.

இப்போது, இந்த ஏவுகணையின் தொழில்நுட்ப ரகசியங்கள் இந்தியாவின் DRDO ஆய்வகங்களில் இருக்கின்றன. இது, இந்தியாவின் Astra Mk II ஏவுகணை திட்டத்துக்கு மிகப்பாரிய ஆதாயமாக அமையலாம்.

இந்த தகவல் Five Eyes கூட்டணியை (அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து), ஜப்பான் மற்றும் தென் கொரியாவை ஈர்த்துள்ளது.

இவை, அந்த PL-15E ஏவுகணையின் ராடார் சீக்கர் மற்றும் புரொப்பல்ஷன் தொழில்நுட்பத்தை ஆராய விரும்புகின்றன.




சீனா, இதை ஒப்புக்கொள்ள தயங்கினாலும், செயல்பாட்டு முறைமையில் இந்தக் ஏவுகணை முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இச்சம்பவம், சீனாவின் ராணுவ ரகசியங்கள் இந்தியாவுக்கு கசியும் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், தெற்காசிய ஆயுத போட்டியின் புதிய அத்தியாயமாகவும் பார்க்கப்படுகிறது.

No comments: