News Just In

6/18/2025 07:14:00 PM

புகையிரதக் கடவையில் விபத்து!

புகையிரதக் கடவையில் விபத்து!



மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பகுதியில் உள்ள புகையிரத கடவையில் கார் ஒன்று புகையிரதத்துடன் மோதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

புகையிரத கடவை புகையிரதம் செல்லும் நேரத்தில் மூடப்படாத நிலையில் அதன் ஊடாக கடக்க முனைந்த கார் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது.

விபத்தில் காரினை செலுத்திச்சென்றவர் படுகாயமடைந்துள்ள நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை புகையிரத கடவையில் புகையிரத கண்காணிப்பாளர் இன்மையினால் தொடர்ச்சியாக கடவை ஊடாக பயணிப்பவர்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர்.



No comments: