News Just In

3/05/2025 07:52:00 AM

மாகாணசபை அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்! குகதாசன் எம்.பி. வேண்டுகோள்!

மாகாணசபை அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்! குகதாசன் எம்.பி. வேண்டுகோள்!




பல நாடுகளில் பல்கலைக்கழகங்களை மாகாண சபைகள் நடத்துகின்ற நிலையில் பேசிய பாடசாலை என்ற பெயரில் மாகாண சபைகளுக்கு கீழிருந்த பல பாடசாலைகளை மத்திய அரசு எடுத்திருக்கின்றது. இது மக்களாட்சி மறுக்கப்படுகின்ற ஒரு செயற்பாடாகும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் குகதாசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்

அதிகாரப் பகிர்வை முதன்மையாகக் கொண்டு மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன.

பல நாடுகளில் பல்கலைக்கழகங்களை மாகாண சபைகள் நடத்துகின்ற நிலையில் தேசிய பாடசாலை என்ற பெயரில் மாகாண சபைகளுக்கு கீழிருந்த பல பாடசாலைகளை மத்திய அரசு எடுத்திருக்கின்றது.

இது மக்களாட்சி மறுக்கப்படுகின்ற ஒரு செயற்பாடாகும்.

இந்தியாவில் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்திய மத்திய அரசுக்கு நிதி அளிக்கும் அளவிற்கு வளர்ந்திருக்கின்றன.

இதற்கு காரணம் அதிகாரம் அதிகமாக அந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: