News Just In

3/05/2025 07:44:00 AM

அமெரிக்க பொருட்கள் மீது 25% வரி விதிப்பு! டிரம்பிற்கு ரூட்டோ நேரடி சவால்!

அமெரிக்க பொருட்கள் மீது 25% வரி விதிப்பு! டிரம்பிற்கு ரூட்டோ நேரடி சவால்



அமெரிக்காவின் வரி விதிப்பு எதிராக கனடாவும் அமெரிக்கா மீது வரி விதிப்பு நடைமுறையை முன்னெடுத்துள்ளது.

கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற்றப்போவதாக தெரிவித்ததோடு, கனேடிய பொருட்கள் மீது 25% வரையிலான வரிவிதிப்பை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

இதற்கு கனடா கடுமையான கண்டனம் தெரிவித்ததோடு, அமெரிக்கா அதன் நெருங்கிய கூட்டாளி நாடான கனடா மீது வர்த்தக போரை தொடங்கி இருப்பதாக குற்றம் சாட்டியது.

இந்நிலையில் கனேடிய பொருட்கள் மீதான 25% வரிவிதிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்க பொருட்கள் மீது 25% வரிவிதிப்பை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ வெளியிட்ட X தளப் பதிவில், அமெரிக்காவின் வரி விதிப்பு அமுலுக்கு வந்தவுடன், கனடாவின் புதிய வரிவிதிப்பும் அமுலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, கிட்டத்தட்ட 155 பில்லியன் டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்கள் மீது கனடாவின் 25% வரிவிதிப்பு அமுல்படுத்தப்படும்.

முதலில் 30 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மீது இந்த வரி விதிப்பு தொடங்கி, 21 நாட்களில் மீதமுள்ள 125 பில்லியன் மதிப்புள்ள பொருட்கள் மீது வரி விதிப்பு செயல்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், உங்களால் எங்கள் நாட்டை எடுத்துக் கொள்ள முடியாது என்றும் ரூட்டோ குறிப்பிட்டுள்ளார்.

No comments: