News Just In

3/14/2026 09:26:00 PM

மலிங்கவையே மிரள வைத்த மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய விளையாட்டுக்கழக இளைஞன்

மலிங்கவையே மிரள வைத்த மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய விளையாட்டுக்கழக இளைஞன்


மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலய சிவானந்தியன் விளையாட்டுக்கழக வீரருமான 22 வயதுடைய அழகையா லதுர்சன் அவர்கள் கிறிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கா தலைமையில் கொழும்பு நடைபெற்ற திறமை தேடல் முகாமில் மணிக்கு 126 Km வேகத்தில் பந்து வீசி மலிங்கவினதும் அங்கிருந்தவர்களின் பாராட்டையும் பெற்றார்.
இன்றைய தேர்வில் பந்து வீசியவர்களில் லதுசனே அதிவேகத்தில் பந்துவீசி மட்டக்களப்புக்கு பெருமை சேர்த்துள்ளார்
மலிங்கா இவரை பாராட்டியதுடன், முறையான பயிற்சி அளிக்கப்பட்டால் இந்த வேகம் 140 கி.மீ-ஐ எளிதாகத் தாண்டும் என்றும் கணித்து கூறியுள்ளார்
தேர்வு முடிந்த பின் இன்றைய தேர்வுகளில் காணப்படும் சிறந்த பந்து வீச்சாளர் குறித்து லசித் மலிங்கா கருத்து தெரிவித்தார்.
“இதுவரை நம்மிடம் உள்ள வேகமான பந்து வீச்சாளர் மட்டக்களப்பில் இருக்கிறார்.. அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனவே கொழும்புக்கு வெளியே யார் நமக்கு வல்லவர் என்று பார்க்க விரும்பினோம்.அவர் 126 (மணிக்கு கிலோமீட்டர்) வேகத்தில் பந்து வீசுகிறார்.
காலப்போக்கில் அவர் தனது வேகத்தை அதிகரிக்கும் திறன் கொண்டவர் என்று நான் நினைக்கிறேன்.அதனால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
எனவே இப்போது மணிக்கு 126 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஒருவரைக் கண்டுபிடித்துள்ளோம்.அதுவும் இப்போது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
ஊருக்குச் சென்ற பிறகும், நீங்கள் இன்னும் ஃபிட்டாக இருப்பீர்கள், வேகமாக பந்து வீசுவீர்கள். எனவே உங்களுக்கு நல்வாழ்த்துக்கள்.. நன்றாக பயிற்சி செய்யுங்கள்.. நன்றாக சாப்பிட்டு பலம் பெறுங்கள், அடுத்த முறை நீங்கள் வரும்போது இன்னும் வேகமாக பந்து வீசுங்கள்.” என்று மாலிங்க தெரிவித்தார்.
வடகிழக்கு, கிழக்கு மாகாணங்களில் மறைந்துள்ள இவ்வாறான கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொணர இந்த முகாம் ஒரு பாலமாக மலிங்கவின் இம் முயற்சி அமைந்துள்ளது.

No comments: