News Just In

3/30/2025 11:26:00 AM

மஹ்மூத் வருடாந்த இப்தார் நிகழ்வு - 1446 (2025)!

மஹ்மூத் வருடாந்த இப்தார் நிகழ்வு - 1446 (2025)


நூருல் ஹுதா உமர்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) வருடாந்த இப்தார் நிகழ்வுகள் மிக நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் கல்லூரியின் முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் (SLEAS) தலைமையில் சேர் ராசிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.

ரமாழன் மற்றும் இப்தார் மண்புகள் தொடர்பான சிறப்பு பயான் கல்முனை பட்டின பள்ளியின் பேஷ் இமாம் அவர்களினால் நிகழ்த்தப்பட்டதுடன் விசேட துஆ பிராத்தனையும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், கல்முனை வலயக் கல்வி பணிமனையின் பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், உலமாக்கள், பிரதேச பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூக நிறுவனங்களின் பிரதானிகள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள், கல்லூரியின் பிரதி, உதவி அதிபர்கள், பகுதி தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், பழைய மாணவிகள் சங்க உறுப்பினர்கள், பாடசாலை நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இப்தார் நிகழ்வினை மஹ்மூத் ஆசிரிய சங்க செயலாளர் முஸ்தபா ஹக்கீம் தொகுத்து வழங்கினர். இராப்போசன விருந்துபசாரத்துடன் இப்தார் நிகழ்வுகள் நிறைவுற்றது

No comments: