News Just In

3/30/2025 11:30:00 AM

மட்டக்களப்பில் தேர்தல் தொடர்பில் உயரதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

மட்டக்களப்பில் தேர்தல் தொடர்பில் உயரதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்


(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

எதிர்வரும் உள்ளுரதிகார சபைகள் தேர்தல் தொடர்பில் மட்டக்களப்பில் உயரதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் பழைய மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் வெள்ளியன்று 28.03.2025 இடம்பெற்றது.

தேர்தல்கள் உதவி ஆணையாளர் எம்.எ.எம். சுபியானின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் உள்ளுரதிகார சபைகள் தேர்தலுக்காக மேற்கொள்ளப்படவுள்ள முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடல் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்ஷினி சிறீகாந்த், நவரூபரஞ்சினி முகுந்தன், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், முப்படை உயர் அதிகாரிகள், உயர் பொலிஸ் அதிகாரிகள், பதவிநிலை உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்

No comments: