News Just In

3/30/2025 11:43:00 AM

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை?

மியான்மர் நிலநடுக்கம்: லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை என்ன? 10,000-ஐ தாண்டுமா பலி எண்ணிக்கை?



மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு வாழும் தமிழர்கள் உட்பட 25 லட்சம் இந்திய வம்சாவளியினரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மியான்மர் நிலநடுக்கம்

மியான்மரில் நேற்று முன்தினம் காலை 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, 6.8 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மரில் (பர்மா) மோனிவா அருகே ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 1600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்களில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மியான்மரில் தற்போது 25 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.



இவர்களில் 60% பேர் தமிழர்கள் ஆவார்கள், இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மண்டலை மாகாணத்தில் தமிழர்கள் அதிகம் வசித்து வருகின்றனர்.

இந்த நிலநடுக்கத்தால் அவர்களின் வீடுகள் மற்றும் உடமைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

இதையடுத்து மியான்மர் நிலநடுக்கம் தொடர்பான உதவிக்கு இந்திய அரசு உதவி எண்களை அறிவித்துள்ளது. மேலும் நிலநடுக்கம் தொடர்பான தமிழர்களுக்கான உதவி எண்களை, அயலகத் தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது.

No comments: