News Just In

12/13/2024 03:57:00 PM

மீன் பிடிப் படகு கவிழ்ந்ததில் மீனவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

மீன் பிடிப் படகு கவிழ்ந்ததில் மீனவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு - முகத்துவாரம் கடல் பகுதியில் மீன் பிடிப் படகு கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

திராய்மடு, முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான கோடீஸ்வரன் வேணுராஜ் (வயது 34 ) என்பவரே உயிரிழந்துள்ளார்

இருவர் வியாழக்கிழமை மாலை முகத்துவாரம் கடல் பகுதியில் இருந்து இயந்திரப் படகில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது படகு கவிழ்ந்துள்ளது.

இதனால் படகில் வந்த இருவரும் மூழ்கியுள்ளனர். அவர்களில் ஒருவர் உதவிக்கு விரைந்தோரால் காப்பாற்றப்பட்டுள்ளார். உயிரிழந்தவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கொக்குவில் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments: