(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
மட்டக்களப்பு – வடமுனை ஊத்துச்சேனைக் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் வியாழன் இரவு நிகழ்ந்துள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
வடமுனை ஊத்துச்சேனையைச் சேர்ந்த 48 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான வேலு சிவசுப்பிரமணியம் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
தாக்கி கொலை செய்யப்பட்டவர், குடும்பத் தகராறு காரணமாக அவரது மனைவியின் சகோதரனால் தாக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மதுபோதை அருந்திவிட்டு அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் சண்டையாகமாறியதில் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தாக்கியவரையும் அவரது மனைவியையும் (கணவன்-மனைவி) இருவரைக் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனைப் பொலிஸாருடன் இணைந்து மட்டக்களப்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரும் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

No comments: