இலங்கையில் இஸ்ரேலியர்கள் தாக்கப்படலாம் - 'மொசாட்' வழங்கிய தகவல்
'இலங்கைக்கான 4ஆம் நிலை முக்கிய பயண எச்சரிக்கை ஆலோசனையை வழங்க இஸ்ரேல் நடவடிக்கை எடுத்திருந்தது. இலங்கையில் உள்ள அனைத்து இஸ்ரேலிய பிரஜைகளும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும், தூரத்தில் இருந்தால் உடனடியாக வெளியேறி கொழும்புக்கு வர வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், இஸ்ரேல் அரசின் தேவைக்காக தவிர எந்தவொரு இஸ்ரேலிய பிரஜையும் இலங்கையில் தங்க முடியாது எனவும் வலியுறுத்தியது. மொசாட் போன்ற உலகின் முதல் நிலை உளவுப் பிரிவு, 4ஆம் நிலை பயண எச்சரிக்கை அறிவிப்பை வெளியிடுவது மிகவும் பாரதூரமான நிலையாகும்'
No comments: