(அஸ்ஹர் இப்றாஹிம்)
பாடசாலை மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர பாடசாலைகளில் மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களின் தலயாய கடமையாகும்.
மாணவர்கள் புத்தகப் பூச்சிகளாக இருந்து பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளைப்பெற்று பாடசாலையை விட்டு வெளியே சென்றாலும் சமூகமயப்படுத்தப்படாத காரணத்தால் பல்வேறு துன்பங்களை பலர் இன்று அனுபவித்து வருகின்றனர்.
பாடவிதானத்தோடு இணைப் பாடவிதான செயற்பாடும் சேரும் போது அம் மாணவன் கல்வியில் பூரணத்துவம் அடைகின்றான்.
இவ்வாறான நிகழ்வொன்று கல்முனை கல்விக் கோட்டத்திற்குட்பட்ட சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் மற்றும் இணைப்பாடவிதானத்திற்கு பொறுப்பான ஆசிரியர் எம்.எப்.றிஸ்வி ஹாதிம் ஆகியோரின் ஆலோசனை வழிகாட்டலில் ஆரம்பபிரிவு முதன்மை நிலை மாணவர்களின் மாணவர் மன்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
தரம் 3,தரம் 4 வகுப்பாசிரியர்கள் இதனை ஒழுங்கு செய்து நநடாத்தினர். இதன்போது அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி கட்டுறு பயிற்சி ஆசிரியர்களின் நிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.
No comments: