(அஸ்ஹர் இப்றாஹிம் )
மட்டக்களப்பு- வந்தாறுமூலை பிரதேசத்தில் திங்கள் (2) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளார்.
இவரை மோதிய உழவு இயந்திரத்துடன் சாரதி தலை மறைவாகியுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவரை பின்னால் வந்த உழவு இயந்திரம் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வந்தாறுமூலைப் பிரதேசத்தைச்சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயதுடைய கணேசநாதன் ரகுநாதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
36 வயதுடைய இவர் சுமார் 15 வருடங்கள் மத்திய கிழக்கு நாட்டில் தொழிலாளியாகப் பணியாற்றிவிட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே நாடு திரும்பியுள்ள நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.ஏறாவூர் பொலிஸார் உழவு இயந்திர சாரதியை தேடுவதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments: