News Just In

9/01/2024 05:32:00 AM

கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் வருடாந்தபொதுக்கூட்டம்




(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் வருடாந்த பொதுக்கூட்டம் கொழும்பு ஹெக்டர் கொப்பேக்கடுவ விவசாய ஆராய்ச்சி நிலைய கட்டிடத் தொகுதியில் இடம்பெற்றது.

பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையின் தலைவர் பொறியியலாளர் ஏ.எச்.ஏ.நிசார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லூரி அதிபர் எம்.ஐ.ஜாபிர் பிரதம அதிதியாவும், பாடசாலை அபிவிருத்தி சபை செயலாளரும், சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரியுமான டொக்டர் ஸனூஸ் காரியப்பர் ,கல்லூரியின் ஆசிரியர் சட்டமுதுமாணி ஷஹ்பி எச் இஸ்மாயில் ஆகியோர விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கல்லூரியின் கல்வி , விளையாட்டு அபிவிருத்தி மற்றும் பெளதீகவள அபிவிருத்தியில் மிகவும் அக்கறை கொண்டு செயற்படும் பழைய மாணவர் சங்க கொழும்பு கிளையினர் எதிர்காலத்தில் கல்லூரியின் முன்னேற்றம் சம்பந்தமான பல புதிய திட்டங்களை அமுல்படுத்தவுள்ளனர்.

நிகழ்வின் இறுதியில் நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது

No comments: