(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சம்மேளனத்தினால் நடாத்தப்பட்ட வட மாகாண மட்ட ஒற்றையர் சதுரங்கப் போட்டியில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மாணவர்கள் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதில் 9 மாணவர்கள் மன்னார் புனித சேவியர் ஆண்கள் கல்லூரி சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விடயமாகும்.
அதன் வரிசையில் இருபது வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் ஏ.ஜே.கிரிசாந்த் என்ற மாணவர் சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு, மன்னார் மாவட்டத்திற்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துத் தந்துள்ளதுடன்,மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் மாகாண ரீதியில் சாம்பியனாக தெரிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவை ஆகும்.
No comments: