News Just In

6/17/2024 12:25:00 PM

மட்டக்களப்பு மாவட்ட பிரதேச செயலங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு விழா!




மட்டக்களப்பு மாவட்ட செயலக விளையாட்டு பிரிவும் கிழக்கு மாகாண விளையாட்டுதிணைக்களமும்இணைந்துநடத்தும்பிரதேசசெயலங்களுக்கிடையிலானமாவட்ட மட்ட விளையாட்டு விழா மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்ட காணிப் பகுதிக்கான மேலதிக அரசாங்க அதிபர நவரூப ரஞ்சனி முகுந்தன் தலைமையில் இடம்பெற்ற 2024 விளையாட்டு விழா நிகழ்வில் பிரதம அதிதியாகமாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள பணிப்பாளர். உ.சிவராஜா , கிழக்கு மாகாண சிரேஸ்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்வரன், 243 காலாட் இராணுவ படை பிரிவு கட்டளை அதிகாரி பிகெடியர் சந்திக்க குமாரசிங்க ஆகியோர் கலந்து கொண்டனர்.


48 ஆவது விளையாட்டு விழா நிகழ்வுக்கு இணையாக நடத்தப்பட்ட பிரதேச செயலங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட விளையாட்டு விழா நிகழ்வில் பாடசாலை மாணவர்களின் பாண்ட் வாத்திய இசையுடன் அதிதிகள் அழைத்துவரப்பட்டு தேசியக்கொடி மாகாண கொடி விளையாட்டு கொடி ஆகியன ஏற்றப்பட்டு வீரர்களின் விளையாட்டு நிகழ்வுகள் நடைபெற்றன.



விளையாட்டு விழா நிகழ்வில் வெற்றி பெற்ற வீரர்களுக்கான வெற்றிக்கிண்ணங்கள் வழங்கப்பட்டதோடு, அதிதிகள் கௌரவிப்பும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: