News Just In

12/16/2023 12:12:00 PM

கொழும்பில் மொட்டுவின் மாநாடு குறித்து சர்ச்சை : மக்களுக்கு பெருந்தொகை பணத்தை வாரி வழங்கும் பசில்




ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கட்சி மாநாட்டிற்கு வருவதற்கு மக்களுக்கு வவுச்சர் வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முன்னணி சோசலிஸ கட்சி தெரிவித்துள்ளது.

தெமட்டகொட, மாளிகாவத்தை, வனாத்தமுல்லை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு இவ்வாறு வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அடுத்த பாடசாலை தவணை ஆரம்பிக்கும் போது பிள்ளைகளுக்கு புத்தகங்களை பெற்றுக் கொள்வதற்காக வவுச்சர் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் கூட்டத்தின் ஆரம்பம் முதல் முடியும் வரை தங்கியிருப்பவர்களுக்கு மாத்திரம் வவுச்சர் வழங்கப்படும் என முன்னணி சோசலிஸ கட்சியின் விளம்பர செயலாளர் புபுது ஜயகொட தெரிவிததுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாரிய மாநாடு நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதனை கட்சியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஒழுங்கு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: