News Just In

12/16/2023 12:02:00 PM

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரொனோ!




இந்தியாவில் கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த 12 மணி நேரத்தில் மேலும் 280 பேருக்கு கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளனர்இதனால் தற்போது கொரோனா தொற்றால் கேரள மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,144 ஆக அதிகரித்துள்ளது.

தற்போது கேரளாவில் பரவும் கொரோனா தொற்றினால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.கேரளாவில் முதல்முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா பரவுவது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த வகை கொரோனா தொற்று வேகமாக பரவக்கூடியது என்பதால், பரிசோதனையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

No comments: