News Just In

12/12/2023 06:09:00 PM

இடிந்துவிழும் பாடசாலை சுவர்கள் !சிலாபத்தில் இரு மாணவர்கள் காயம்




புத்தளம் - சிலாபம் பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் அந்த பாடசாலையில் தரம் 10 மற்றும் 11இல் கல்வி கற்கும் மாணவர்களாவர்.

தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த இந்த சுவருடன் பொருத்தப்பட்டிருந்த வாயிலை குறித்த மாணவர்கள் மூட முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது காயமடைந்த மாணவர்கள் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: