News Just In

12/15/2023 01:08:00 PM

விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயது 63 ஆக அதிகரிப்பு !





அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது.

அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு 60 வயதில் ஓய்வு வழங்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்த்து வைத்தியர்கள் குழு ரிட் மனுவொன்றை மேன்முறையீட்டு நிதிமன்றில் தாக்கல் செய்திருந்தது.

இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீடிக்க நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது

No comments: