News Just In

12/15/2023 05:18:00 PM

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த!




ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்று வரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சம்மேளனக் கூட்டத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இருந்து இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்புக்கு வருகைத் தந்துள்ளனர்.

இதன்போது, பொதுஜன பெரமுனவின் தலைவராக மகிந்த ராஜபக்சவின் பெயரை காமினி லொகுகே முன்மொழிந்ததுடன், அதனை ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ வழிமொழிந்தார்.

அதன் பிறகு, பேரவையில் இருந்த கட்சி உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு பொது மாநாட்டில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது


No comments: