சதொச விற்பனை நிலையத்தினால் 10 அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
இன்று வெள்ளிக்கிழமை (15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பால் மா 10 ரூபாவாலும், இறக்குமதி செய்யப்பட்ட டின் மீன் (425 கிராம்) 55 ரூபாவாலும், 155 கிராம் இறக்குமதி செய்யப்பட்ட டின்மீன் 10 ரூபாவினாலும், 425 கிராம் உள்நாட்டு டின்மீன் 20 ரூபாவினாலும், உள்ளூர் உருளைக்கிழங்கு 15 ரூபாவினாலும், இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு 15 ரூபாவினாலும், கொண்டைக்கடலை 5 ரூபாவினாலும் விலை குறைக்கப்பட்ட பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
No comments: