
காஸா அல் ஷிஃபா மருத்துவமனையில் ஹமாஸ் படையினர் டன் கணக்கில் ஆயுதங்களை பதுக்கிவைத்திருக்கும் விடியோவை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.
காஸாவின் அல் ஷிஃபா மருத்துவமனைக்கு அடியில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் ஹமாஸ் கட்டளை மையத்தை கட்டியிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் வெளிப்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் புதிதாகப் பிறந்த குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கான நோயாளிகள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மருத்துவமனை வளாகத்தில் இருந்து தானியங்கி ஆயுதங்கள், கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் மற்றும் ஃபிளாக் ஜாக்கெட்டுகளை இஸ்ரேலிய இராணுவம் கைப்பற்றிய வீடியோ ஒன்று வந்தது.
அல் ஷிஃபா மருத்துவமனையை இஸ்ரேலியப் படைகள் சோதனை
காஸா அல் ஷிஃபா மருத்துவமனையில் வியாழக்கிழமையும் இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து சோதனை நடத்தின. ஹமாஸ் பயங்கரவாதிகள் மருத்துவமனையில் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது. இஸ்ரேலிய டாங்கிகள் மருத்துவ வளாகத்திற்குள் இருந்ததாகவும், ராணுவ வீரர்கள் தீவிர சிகிச்சை பிரிவுகள், அவசர மற்றும் அறுவை சிகிச்சை பிரிவுகளுக்குள் நுழைந்ததாகவும் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
No comments: