News Just In

11/16/2023 07:27:00 PM

புலம்பெயர் இலங்கையர்களிடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை!








மொழி அறிவை சிங்களம், தமிழ் மொழிகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த முடியாது எனவும், 2030 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் ஆங்கிலம் என்ற திட்டம் அனைத்து பாடசாலைகளிலும் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் பல்கலைக்கழகளிலும் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (16) நடைபெற்ற ஆர்.ஐ.டி. அலஸின் 10 ஆவது நினைவு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புலம்பெயர் இலங்கையர்கள் இந்நாட்டு பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்

No comments: